ஒருங்கிணைப்பாளர் செயல்பாட்டில் அதிருப்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தில் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகள் விலகல்

குளித்தலை ஏப்.16: கரூர் மாவட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் குளித்தலையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ராமலிங்கம் பொய்கைபுத்தூர்  கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகராஜன் வரவேற்றார்.  இதில் பொதுக்குழு உறுப்பினர்  ராமசாமி பேசுகையில்  தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலும், டெல்லியிலும் பலகட்ட போராட்டங்கள் நடத்தி  பிரதமர் சிறிதளவு கூட இரக்கம் இல்லாமல் பாராமுகமாக இருந்துவிட்டார். இதனால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்தோம்.இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு  பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற  தேர்தலில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111  பேர் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அய்யாக்கண்ணு விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் ஒருசில விவசாயிகள் பிரதிநிதிகள் மட்டும் கூடி அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்து ஆதரவு தருவதாக வாக்குறுதி கொடுத்து வந்து பிறகு திருச்சியில் பொதுக்குழுவை கூட்டி அய்யாக்கண்ணு மத்தியில் நம் கோரிக்கைகள் விவசாய கடன் தள்ளுபடி தவிர அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இதற்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக் கொண்டார்,. அதற்கு விவசாயிகளாகிய நாங்கள் முக்கிய பிரச்சனையான விவசாயி கடன் தள்ளுபடியை தவிர்த்து மீதி கோரிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் வெளிநடப்பு செய்து வந்துவிட்டோம். அதனால் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத காரணத்தினால் இச்செயலை கண்டித்தும் இச்சங்கத்தில் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் விலகி கொள்வதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என  தெரிவித்தார்.கூட்டத்தில் கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.முடிவில் ரங்கன் நன்றி கூறினார்.

Tags : South Indian Ridge Connection Association ,
× RELATED வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்...