×

பாடாலூரில் அரசு அவசர சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சிவபதி உறுதி

பாடாலூர், ஏப்.16: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிவபதி தெரிவித்தார்.பெரம்பலூர்  மக்களவை   தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள நாட்டார்மங்கலம்,  நாரணமங்கலம், இரூர்,பாடாலூர், திருவளக்குறிச்சி, விஜயகோபாலபுரம் உள்ளிட்ட  கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பாடாலூரில் பேசுகையில்.  ஜெயலலிதாவின் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  செயல்படுத்தி வருகிறார்.  பாடாலூரில் உள்ள குடிநீர்  பிரச்னையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள அரசு அவசர சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும்,  வலிமையான பாரதத்தை உருவாக்கவும் நடைபெறுகின்ற மக்களவை  தேர்தலில் நீங்கள் இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.  அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக  கலந்து கொண்டனர்.

Tags : Sivapati ,Perambalur AIADMK ,state emergency department ,Patalur ,
× RELATED அதிமுக நிர்வாகி காரில் ரூ.8.50 லட்சம் பறிமுதல்