×

ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு தொழில் முனைவோர் பயிற்சி

தா.பழூர், ஏப். 16: அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் இயங்கிவரும் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஓய்வுப்பெற்ற இளைஞர்களுக்கான (ராணுவ வீரர்கள்) தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியுடன் மகேந்திர டிராக்டர் நிறுவனத்தால்  உயரிய விருதான “மகேந்திர சம்ரிதி க்ரிஷி விக்யான் கேந்திரா 2019” என்ற விருது வழங்கி கவுரவித்ததுக்கு உறுதுணையாக இருந்து ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன்  பயிற்சியின் நோக்கத்தைப்பற்றியும், அனைத்து வசதிகள் கொண்ட விவசாயம் நிலம் இருந்தும் விவசாயத்தில் ஈடுபட முடியாத ஓய்வுபெற்ற வீரர்கள் தங்களது நிலங்களை குத்தகைக்கு மையத்தின் வேளாண் இளைஞர்கள் குழு உறுப்பினர்களுக்கு வழங்கி தனிநபர் வாழ்வாதாரத்தையும், மாவட்டத்தின் உற்பத்தியையும் பெருக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

மையத்தின்  தலைவர் நடனசபாபதி  மையத்தின் செயல்பாடுகளையும், வீரர்களின் சேவை நாட்டின் எல்லை பாதுகாப்பில் மட்டுமில்லாமல் விவசாயத்தைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் இவ்விருதினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தமைக்கு நன்றித் தெரிவித்தார். மையத்தின் வல்லுநர்கள் திரு.ராஜாஜோஸ்லின், அசோக்குமார், திருமலைவாசன், சோபனா ஆகியோர் விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் நாற்றங்கால் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பட்டுப்புழு உற்பத்தி, அசோலா, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு, மதிப்புக்கூட்டுதல் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியின் முடிவில் நடனசபாபதி அனைத்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
முன்னதாக தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா, வரவேற்றார். முடிவில் தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் நன்றி கூறினார்.


Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா