×

களக்காடு கோயிலுக்கு புதிய யானை வாகனம்

களக்காடு,ஏப்.16:  களக்காடு கோயிலுக்கு புதிய யானை வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பிரசித்திப்பெற்றது ஆகும். இந்த கோயில் பங்குனி திருவிழாவின் போது பெருமாள் வீதி உலா வருவதற்கு குதிரை, தோளுக்கினியான், கருடன் உள்பட பல்வேறு வாகனங்கள் உள்ளன. ஆனால் பழங்காலத்தில் தயார் செய்யப்பட்ட யானை வாகனம் அழிந்ததால் யானை வாகனம் இல்லை.இதையடுத்து கோயிலுக்கு புதிய யானை வாகனம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. களக்காடு கோவில்பத்து சொர்ணகலா மர சிற்ப நிலைய தலைமை சிற்பி குமரேசன் ஸ்தபதிகள் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாத வண்ணம் மிகுந்த கலை நுட்பத்துடன் யானை வாகனத்தை வடிவமைத்துள்ளார். சிற்ப கூடத்தில் இருந்து புதிய வாகனத்தை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின் இரவில் வரதராஜபெருமாள் புதிய யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

Tags : Kalakkadu Temple ,
× RELATED களக்காடு கோயிலில் பிப்.8ல் தெப்ப உற்சவம் தொடக்கம்