×

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தென்காசியில் ஹைதர்அலி பிரசாரம்


தென்காசி, ஏப்.16:  தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தென்காசி கொடிமரம், புதிய பேருந்து நிலையம், மவுண்ட்ரோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.  நிகழ்ச்சிக்கு நகர மமக தலைவர் அகமதுஷா தலைமை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சலீம், தமுமுக செயலாளர் களஞ்சியம்பீர், மமக செயலாளர் இறையடியான்சேட், பொருளாளர் ஜாபர்உசேன், அகமதுநியாஸ், அப்துல்ரகுமான், ரம்ஜான் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நயினார்முகம்மது, மாவட்ட செயலாளர் கொலம்பஸ்மீரான், துணை செயலாளர் ஆரிப், கோகோஅலி, கோக்கர்ஜான்ஜமால், ஷரீப், அபாபில்மைதீன், முகம்மது பிலால், முத்தலிப், ஆதம்பின்ஆஷிக், திவான்ஒலி, நல்லவர்சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Haider Ali ,campaign ,Tenkasi ,candidate ,DMK ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...