×

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரபாகரன் எம்பி தீவிர வாக்குசேகரிப்பு

பாவூர்சத்திரம், ஏப்.16:  நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து பிரபாகரன் எம்பி கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கீழப்பாவூர் அம்மன் கோயில் மைதானம், கீரைத் தோட்டத் தெரு, சந்தைதோப்பு தெரு, பாரதியார் தெரு, புதுஅம்மன் கோவில் தெரு, செங்குந்தர் பிள்ளையார் கோயில் தெரு, பெரிய தெரு, பழைய பஞ்சாயத்து ஆபீஸ் தெரு, யாதவர் வடக்கு தெரு, பஜனை கோயில் தெரு, வாணியர் காந்தி சிலை தெரு, சூளைத் தெரு உட்பட கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அவருடன் நகர செயலாளர் ஜெயராமன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேர்ம்பாண்டி, அட்மா சேர்மன் கணபதி, கோபால், வேல், முத்துசாமி,  பாரதிய ஜனதா அருள் செல்வன், சுரேஷ்முருகன்உட்பட கூட்டணி கட்சியினர்  திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Prabhakaran MP ,candidate ,AIADMK ,
× RELATED ‘நீட்’டில் விட்டோம்; ஆனால்...