×

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

நெல்லை, ஏப். 16:  நெல்லை மக்களவை தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருவேன் என்று அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உறுதியளித்து உள்ளார்.நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், நேற்று பாளை மார்க்கெட் அருகே பிரசாரம் தொடங்கினார். இயற்பகை நாயனார் தெரு, கோட்டூர் ரோடு, சமாதானபுரம், எம்கேபி நகர், சாந்திநகர், ரகுமத்நகர், கேடிசி நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மாநகராட்சி பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.பிரசாரத்தில் பாளை பகுதி செயலாளர் அசன்ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், அக்ரோ சேர்மன் சுப்ரித், கேடிசி சின்னபாண்டி, நயினார், பூக்கடை சப்பாணிமுத்து, மகளிரணி ராம்சன் உமா, முத்துலட்சுமி, பானு மற்றும் தமஜக மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், செய்தி தொடர்பாளர் ஜமால், மாவட்ட பொருளாளர் சாந்திஜாபர், மீனவரணி தாமஸ், மேலப்பாளையம் பகுதி தலைவர் செரீப் உள்பட கலந்து கொண்டனர்.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...