×

ராஜஸ்தான் முதியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

புதுச்சேரி, ஏப். 16:  புதுவை, சாரம், தென்றல் நகரில் கடைவீதிக்கு சென்ற 10 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வடமாநில முதியவர் பிரசாதம் தருவதாககூறி அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பலமுறை கெஞ்சியும் அந்த நபர், விடுவிக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுமி வடமாநில முதியவரின் கையை கடித்துவிட்டு தப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தை பெற்றோரிடம் கூறவே, அவர்கள் உடனே அங்கு சென்று வடமாநில தொழிலாளியை தட்டிக் கேட்டனர். அப்போது அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவரவே அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

 பின்னர் அந்த முதியவரை அங்கு கட்டி வைத்து தர்மஅடி கொடுத்து பொதுமக்கள், கோரிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த முதியவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சம்பவம் பற்றி சிறுமியின் தந்தை கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதை பெற்றுக் கொண்ட போலீசார், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்து அவர்களது அறிவுரைக்கிணங்க அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போலீசாரின் விசாரணையில், சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த முதியவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் (54) என்பதும், இவர் வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து இங்கு வாடகை வீட்டில் தங்கி வேலைசெய்ததும் தெரியவந்தது. இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டை முதியவர் ஜெகதீஷ் மறுத்து வருவதால் தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது.

Tags : Rajasthan ,
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...