×

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ₹48 லட்சத்துக்கு தானியங்கள் கொள்முதல்

கள்ளக்குறிச்சி, ஏப். 16: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று 470 விவசாயிகள், 720 மூட்டை  தானியங்களை விற்பனைக்கு  எடுத்து வந்தனர். அதில் 70 மூட்டை மக்காச்சோளம், 500 மூட்டை உளுந்து மற்றும் தட்டைப்பயிர், பச்சைபயிர், வரகு, ராகி, சிகப்பு சோளம் உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதில் 100 கிலோ மக்காச்சோளம் மூட்டை குறைந்தபட்சம் ரூ.2187க்கும், அதிகபட்சமாக ரூ.2332க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து மூட்டை குறைந்தபட்சமாக ரூ.4999க்கும், அதிகபட்சமாக ரூ.5996க்கும் விற்பனை செய்யப்பட்டது. கம்பு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.2099க்கும், அதிகபட்சமாக ரூ.2730க்கும் விற்பனை செய்யப்பட்டது. மணிலா மூட்டை குறைந்தபட்சமாக ரூ.5469க்கும், அதிகபட்சமாக ரூ.5593 விற்பனை செய்யப்பட்டது. எள்ளு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.7576க்கும், அதிகபட்சமாக ரூ.9899க்கு விற்பனை செய்யப்பட்டது. சிகப்பு சோளம் மூட்டை குறைந்தபட்சமாக ரூ.3860க்கும், அதிகபட்சமாக ரூ.4049க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் தானியங்கள் வரத்து அதிகரித்தது. நேற்று மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.48 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக  கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்தார்.   


Tags : Kallakurichi Market Committee ,
× RELATED கள்ளக்குறிச்சி மார்க்கெட்...