மன்னார்குடி மேலகண்டமங்கலத்தில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி பள்ளி மாணவி நூதன பிரசாரம்

மன்னார்குடி, ஏப். 16; திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவி  வைஷ்ணவி (6).  நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் வாக்களித்துத் தேசக் கடமை ஆற்ற வலியுறுத்தி அதற்காக தானே ஒரு பதாகையை தயாரித்து பள்ளி முன் அதன் அருகில் நின்று கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையொட்டி பள்ளி தலைமையாசிரியை அமுதா, ஆசிரியர்கள் மணி, கணேசன்,  அர்ச்சுனன், மோகன்,  அருள், ஆசிரியை  நூர்ஜஹான் மற்றும் கிராம மக்கள் அவரை வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த முறை கண்டிப்பாக அனைவரும்  தேர்தலில் வாக்களிக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.

× RELATED நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பளம்...