×

குமரி கடற்கரை கிராமங்களில் அமமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

நாகர்கோவில், ஏப்.16 :  குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அமமுக வேட்பாளர் இன்ஜினியர் லெட்சுமணனுக்கு மீனவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் இன்ஜினியர் லெட்சுமணன், குளச்சல் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட குறும்பனையில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இனிகோ நகர், மிடாலம், மேல்மிடாலம், ஹெலன்நகர், இனயம், புத்தன்துறை, ராமன் துறை, முள்ளூர் துறை, தேங்காப்பட்டணம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று அவர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது :காங்., பா.ஜ. ஆகிய இரு தேசிய கட்சிகளின் வேட்பாளர்களை பாருங்கள். ஒருவர் 40 ஆயிரம் கோடி திட்டங்கள் என்கிறார். ஆனால் கிராம மற்றும் நகர பகுதிகளில் பைக் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மோசமாக உள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. மதத்தை கூறி ஓட்டு கேட்கிறார். அமமுக கூட்டணியில் மதம் கிடையாது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு காங்கிரஸ் இதுவரை எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இப்போது தேர்தல் என்று வந்ததும்,  அக்கட்சி வேட்பாளர் திடீரென சரக்கு பெட்டக துறைமுகத்தை வர விட மாட்டேன் என கூறி உங்களை ஏமாற்றி வாக்குகளை பெற நினைக்கிறார்.

பா.ஜ., காங்கிரஸ் இரு கட்சிகளும் மீனவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக நீங்கள் கோரிக்கை வைக்கிறீர்கள். அதை இரு கட்சியாலும் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது தேர்தல் வாக்குறுதிகளாக தனி அமைச்சகம் என்கிறார்கள். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவில்லை. ஓகி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் இருந்திருந்தால், நிச்சயம் பல மீனவர்களின் உயிர்களை நாம் காப்பாற்றி இருக்க முடியும். தேர்தல் நேரத்தில் வந்து உங்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து வாக்குகளை பெற்று விடலாம் என எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த தேர்தலில் பதிலடி கொடுங்கள்.  மக்கள்பிரச்னையை கையாள எனக்கு தெரியும். இரு தேசிய கட்சிகளையும், மதவாதிகளையும் புறக்கணியுங்கள். டி.டி.வி. தினகரன் கையில் தான் தமிழகம் வர போகிறது. அவர் தான் தமிழகத்தை ஆள போகிறார். இந்த மாவட்ட மக்களுக்கான, மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை டி.டி.வி. தினகரனால் தான் தர முடியும். எனவே இந்த தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கடற்கரை கிராமங்களில் வேட்பாளர் லெட்சுமணனுக்கு அங்குள்ள மீனவர்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் நிர்வாகி சத்யராஜ், தேமுதிக நிர்வாகி பாபு உள்ளிட்ட மாற்று கட்சியினர் அமமுகவில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் ெஜங்கின்ஸ், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாஞ்சில் முருகேசன் மற்றும் ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அமுமகவினர் உடன் சென்றனர்.

Tags : candidate ,Ammukh ,villages ,Kumari Beach ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...