×

முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு

நாகர்கோவில், ஏப். 16: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், முகம்.தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.  மாநாட்டில் நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் முகசீரமைப்பு நிபுணரும். ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியருமான டாக்டர் தினக்ஷ்குமார் கலந்து கொண்டு தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் குறித்த குழு விவாதத்தில் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக முகம், தாடை சீரமைப்பு ஆரம்பித்து அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது ஈடன்ஸ் பல், சீரமைப்பு மருத்துவமனை. டாக்டர் தினக்ஷ்குமாருக்கு அகில இந்திய முகசீரமைப்பு சங்க செயலர் டாக்டர் பிரீத்தம் ஷெட்டி நினைவு பரிசு வழங்கினார்.

Tags : jaw surgery experts conference ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி