×

திருத்தணியில் ரயில் மோதி வாலிபர் பலி

திருத்தணி, ஏப். 16:  திருத்தணி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் ரவீந்திரன் (32).  கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் ரயில்வே பாதை அருகே சென்றுள்ளார். அப்போது,  தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ரவீந்திரனுக்கு,  வெண்ணிலா என்கிற மனைவியும் கதிர், ராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.


கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 18ம் தேதி விடுமுறை: பூ, பழம் மார்க்கெட் இயங்கும்

சென்னை, ஏப். 16: தேர்தல் நாளான 18ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. வாக்குப்பதிவு தினத்தில்  தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்படும் நிறுவனம், அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆசியாவிலேயே  பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தேர்தல் நடைபெறும் 18ம் தேதி இயங்காது என கோயம்பேடு காய்கனி, மலர் மார்க்கெட் சங்கத் தலைவர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி பணிபுரிந்து வருவதால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதாலேயே தேர்தல் நாளான 18ம் தேதி விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோயம்பேடு பூ மார்க்ெகட், மற்றும் பழ மார்க்கெட் வழக்கம் போல் 18ம் தேதி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : teenager ,Tiruttani ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை