×

கிராமம்தோறும் தீவிர பிரசாரம் விளாத்திகுளத்தில் உள்விளையாட்டு அரங்கு

விளாத்திகுளம், ஏப். 16: கிராமங்கள் தோறும் தீவிர பிரசாரம் மேற்கொண்ட சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன், விளாத்திகுளத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து வீரர், வீராங்கனைகள் திறமைகளை உலகறிய செய்ய பாடுபடுவேன் என்றார்.  விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘விளாத்திக்குளம் கண்மாயை முற்றிலும் தூர்வாரி மழை காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரை இருக்கன்குடி அணையில் இருந்து தடையின்றி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தொகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். விவசாயம் இல்லாத காலங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் தொழில்பேட்டை அமைக்கப்படும் இதன்மூலம் ஏராளமான இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவேன்.
 விளாத்திக்குளத்தில் உள் விளையாட்டு அரங்கு அமைத்து வீரர், வீராங்கனைகளின் திறமைகளை உலகறியச் செய்ய பாடுபடுவேன். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் முற்றிலும் நிறைவேற்றப்படும்’’ என உறுதியளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags : venue ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...