செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 439 வாக்குச்சாவடிகளில் 56 சிசிடிவி கேமரா பொருத்தப்படும்

செங்கல்பட்டு, ஏப். 16: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையாட்டி, காஞ்சிபுரம் தொகுதியில் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு சட்டமன்ற  தொகுதியில் மொத்தம் 439 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பால்சிங் நேற்று தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள்,  மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளாதா என ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தொகுதியில் உள்ள 439 வாக்குச்சாவடிகளில், 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில், செங்கல்பட்டு நகரில் குண்டூர், நத்தம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஆலப்பாக்கம், வல்லம், ஒளலூர், மேலமையூர், மன்னிவாக்கம், சிங்கப்பெருமாள்கோயில், வேங்கடமங்கலம், ஊரப்பாக்கம், வண்டலூர், ஆத்தூர்,  திம்மாவரம், பாலூர் ஆகிய பகுதிகள்.
மறைமலைநகர் நகராட்சியில் திருக்கச்சூர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, செங்குன்றம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்குச்சாவடி  மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, தேர்தல் நடக்க உள்ளது. மேலும் இப்பகுதியில் ராணுவம் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதாக தெரிவித்தார்.ஆய்வின்போது செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல், தாசில்தார் சங்கர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

× RELATED பொன்னமராவதியில் குற்றசெயல்களை தடுக்க...