×

கோவில்பட்டி பள்ளி விளையாட்டு விழா

கோவில்பட்டி, ஏப். 16:  கோவில்பட்டி  வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஹாக்கி அணி முன்னாள் தலைவர் தன்ராஜ் பிள்ளை பரிசு வழங்கினார்.
  கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா  பள்ளியில் முதலாமாண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளித் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர்  சாவியோ லூயிஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய ஹாக்கி  அணி முன்னாள் தலைவரும், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது பெற்றவருமான  பத்ம தன்ராஜ் பிள்ளை, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களை பாராட்டி  பரிசுகள் வழங்கினார். இதே போல் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் ஞானதுரை, தடகள போட்டிகளில் தடம் பதிப்பது  குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி  குழுமத்தின் சார்பில் தாளாளர் வீரவேல்முருகன், பள்ளிச் செயலாளர் நாகமுத்து  நினைவு பரிசுகள் வழங்கினர். பள்ளி துணை முதல்வர் மலர்க்கொடி நன்றி  கூறினார்.

Tags : Kovilpatti School Sports Festival ,
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு