×

தென்சென்னையில் குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மின் கம்பிகள் பூமிக்கு அடியில் புதைவடங்களாக மாற்றப்படும்: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா நேற்று சோழிங்கநல்லூர், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருடன் தென்சென்னை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வேளச்சேரி சரவணன் மற்றும், பகுதி, வட்ட செயலாளர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.பிரசாரத்தின் போது இசக்கி சுப்பையா பேசியதாவது:தொகுதி முழுவதும் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு மக்கள் மிகுந்த ஆதரவு தந்து வருகின்றனர். வீதி வீதியாக சென்று அனைத்து தரப்பு மக்களின் தேவைகள் என்ன என்பதை கேட்டு வருகிறேன். கடந்த காலங்களில் எதையும்  செய்யாமல் தட்டி கழித்து மக்களை ஏமாற்றியுள்ளனர். எனக்கு அங்கீகாரம் கொடுக்கும்பட்சத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் தட்டாமல் நிறைவேற்றுவேன் என்று உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உறுதி  அளிக்கிறேன்.

சோழிங்கநல்லூர் தொகுதியை பொறுத்தவரை அதிக குடியிருப்புகள் கொண்ட பகுதியாக உள்ளது. குறைவான மின் அழுத்த பகுதியாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் கூறினர். என்னை  வெற்றி பெறச் செய்தால், இந்த பகுதிக்கு உடனடியாக கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்ல குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைவடங்களாக மாற்றி அமைக்க  நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : territories ,South Cheney ,candidate ,Ammukh ,earth ,
× RELATED அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு,...