×

தென் சென்னை தொகுதியில் மக்கள் பிரச்னையை தீர்ப்பதே முதல் கடமை: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி

சென்னை, ஏப். 14: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, நேற்று மாலை தி.நகர் தொகுதி 141 மற்றும் 136வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் பாபு, பகுதி செயலாளர் அசோக் குமார். இளைஞர் அணி செயலார் ஜெயராமன், சிறுபான்மை பிரிவு செயலாளர் காதர், மாணவர் அணி இணைச் செயலாளர் சிவா உட்பட பலர் வாக்கு சேகரித்தனர். அப்போது இசக்கி சுப்பையா பேசியதாவது:

மிகப்பெரிய வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த தொகுதி தென் சென்னை. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். ஆனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.  அவற்றை முழுமையாக தீர்த்து வைப்பதே எனது முதல் கடமை. தென் சென்னை தொகுதியில் விரிவாரிக்கம் செய்யப்பட்ட பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், அந்தப் பணிகள் மந்தகதியில் நடந்துவருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்தால் தென் சென்னை தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : South Chennai ,candidate ,constituency ,Ismail ,
× RELATED தென்சென்னை தொகுதியில் 2.24 லட்சம் வாக்கு...