×

அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து ஆலங்குளம், களக்காட்டில் சரத்குமார் தீவிர பிரசாரம்

ஆலங்குளம், ஏப். 14 :  நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  மனோஜ் பாண்டியனை ஆதரித்து ஆலங்குளம், களக்காட்டில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வாக்குசேகரித்தார்.ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவர் பேசுகையில், ‘‘செல்லும் இடமெல்லாம் அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்கு என அனைத்துத் தரப்பு மக்களும்  கூறி வருகின்றனர்.  வருங்கால இளைய சமுதாயம் உயர மத்தியில் மீண்டும் நல்லாட்சி மலர, ஆலங்குளம்  பகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற அதிமுக கூட்டணியை ஆதரிக்க  வேண்டும். வெற்றி வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும்‘‘ என்றார். களக்காடு: பின்னர் களக்காட்டில் பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா  வழியில் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் காங்கிரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்க்கிறது. இவ்வாறு மார்க்சிஸ்ட் இரட்டை வேடம் போடுகிறது.

பாகிஸ்தான், சீனா மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஆட்சி நடத்தும் மோடி உழைப்பால் உயர்ந்தவர் மோடி. எனக்கு தெரியும். நியாயத்தை, உண்மையை, நேர்மையை சொல்வதில் நான் நாட்டாண்மைதான். உழைப்பு, உண்மை, நியாயம் நேர்மை நம்மிடம் உள்ளது. நம்மை வெற்றி தேடி வரும் 24 நேரத்தில் விமானி அபிநந்தனை மீட்டவர் மோடி. அவரது தலைமையில் மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.  பிரசாரத்தில் நெல்லை தொகுதி எம்.பி  பிரபாகரன், ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், சமத்துவ  மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜான்ரவி,தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர்  அய்யம்பெருமாள், பாசறை மாவட்டச் செயலாளர் சேர்மபாண்டி, ஆலங்குளம் ஜெ பேரவை  செயலாளர் தனபால்,எம் ஜி ஆர் மன்ற செயலர் சாலமோன் ராஜா அதிமுக நகர செயலாளர்  சுப்பிரமணியன், தமாகா மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன்,  தேமுதிக நகரச் செயலாளர் பழனி சங்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


Tags : Sarathkumar ,Manojpandy ,Salem ,Alangulam ,AIADMK ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...