×

குத்துக்கல்வலசை ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி

தென்காசி, ஏப்.14: தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை சுபிட்ஷ வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் 24ம் ஆண்டு ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுபிட்ஷ வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை சுவாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகங்கள் நடத்தப்பட்டு ராமர் அலங்காரமாக மாற்றி  அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் கணபதிஹோமம், அஷ்டலெட்சுமி ஹோமம், சரபேஸ்வரர் ஹோமம் மற்றும் ராமமூலஜெப ஹோமம், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அகன்ற நாம ஜெபம் நடந்தது. தொடர்ந்து காலை முதல் மாலை வரை அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் பஜனை, இரவில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் ஸ்தபாகர் காசிவிஸ்வநாதன் மற்றும் ராமபக்தர்கள் செய்திருந்தனர்.



Tags : Ramanavami ,Anjaneya Temple ,
× RELATED தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் ராம...