×

புயல், வெள்ளம், துப்பாக்கி சூடு நடந்த போது வராதவர் தேர்தல் வந்தவுடன் தமிழகத்திற்கு ஓடி வருகிறார் ‘மோடி’

ஆறுமுகநேரி, ஏப்.14: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று காலை கோவங்காட்டில் தனது பிரசாரத்தை துவக்கி மஞ்சள்நீர்காயல், பழையகாயல், அகரம், முக்காணி, உமரிக்காடு பிரசாரம் செய்தார். தொடர்ந்து பண்டாரவிளை, சிவகளை, பராக்கிரமபாண்டி, கீழ்பிடாகை கஸ்பா, மாங்கொட்டாபுரம், ஏரல் அருகேயுள்ள பெருங்குளம், பண்டாரவிளை பகுதியில் மற்றும் வைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.பழையக்காயல், முக்காணி பகுதிகளில் மக்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் புயல், வெள்ளம் மற்றும் துப்பாக்கி சூடு என நடந்த போதெல்லாம் வராத பிரதமர் மோடி  தேர்தல் வந்தவுடன் ஓடோடி வருகிறார். எந்த திட்டத்தை எடுத்து கொண்டாலும் அது மக்களுக்கு வந்து சேருவதில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு, கல்வி கடன், விவசாய கடன் ரத்து எனக்கூறி தேர்தல் வாக்குறுதியில் கதாநாயகனாக உள்ளனர். இந்த தேர்தலில் நாம் பாஜ, அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டி நாடும் நமதே, 40ம் நமதே, தமிழ்நாட்டில் ஆட்சியும் நமதே என்ற நிலையை உருவாக்க வேண்டும் இப்பகுதிகளுக்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், குடிநீர்தேக்க தொட்டிகள், தூண்டில் வளைவு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டம் நிறைவேற்றித்தரப்படும். முக்காணி அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கூடம் அமைக்கப்படும்.

இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.இந்நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு கொம்பையா, கிழக்கு பிஜி ரவி, பெருங்குளம் நகர செயலாளர் சுடலை, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரை, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், சுபமாரியப்பன், பிரபாகரன், பாலமுருகன், தேவசகாயம், மதிவாணன், பொறியாளர் அணி ஆனந்த், மாவட்ட பிரதிநிதி சொர்ணபாண்டி, நகர இளைஞரணி முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செந்தில்ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள்,  ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சிசெயலாளர்கள் பழையக்காயல் சேவியர், முக்காணி நட்டார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தாமஸ், காங். நகர தலைவர் சிவனனைந்தபெருமாள், வை ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகவேல், தமிழர் தேசிய கொற்றம் கட்சித்தலைவர் வியனரசு,  முன்னாள் ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் துர்க்கைமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாரியப்பன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : storm ,floods ,shootings ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...