கொங்கணாபுரத்தில் வாக்கு சேகரிப்பு திமுக வேட்பாளர் பார்த்திபன் எண்ணற்ற திட்டங்களை தருவார்

இடைப்பாடி, ஏப்.14: சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நேற்று கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சுப்பள்ளி, கொங்கணாபுரம், சமுத்திரம், தோரணம்பட்டு, எருமைபட்டி, தங்காயூர் உள்ளிட்ட பகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். அவரை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் எம்பி கந்தசாமி பேசியதாவது: வேட்பாளர் பார்த்திபன், மேட்டூர் எம்எல்ஏவாக இருந்தபோது, மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்து நல்ல பெயரை எடுத்துள்ளார். போராட்ட குணம் கொண்ட அவர், எம்பியாக சென்றால் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்கள் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பார். எண்ணற்ற திட்டங்களை சேலம் தொகுதி மக்களுக்கு தந்திடுவார். கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்யாத பணிகளை, பார்த்திபன் செய்து காட்டுவார். மேட்டூர் காவிரி நீர்பாசன திட்டத்தை கொண்டு வருவார்.

மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு அமைந்தவுடன், ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் ஆண்டுக்கு ₹72 ஆயிரம் வழங்கப்படும். எனவே, அவருக்கு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு முன்னாள் எம்பி கந்தசாமி பேசினார். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் எம்எல்ஏ காவேரி, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் பரமசிவம், பேரூர் செயலாளர் அர்த்தனாரீஸ்வரன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் முருகன், முன்னாள் தலைவர் கோபால், விசிக அய்யாவு, கொமதேக லோகநாதன், சிபிஐ மோகன், சிபிஎம் ராமமூர்த்தி, தவாக அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கருப்பு வைரம், மணி, பழனிசாமி, சித்தையன், மல்லன், விக்டர், அருணாசலம், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>