தேர்தல் அறிக்கையை விளக்கி கூறி திமுக வேட்பாளர் சத்யா பிரசாரம்

ஓசூர், ஏப்.14: ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா தீவிர பிசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர், ஓசூர் நகர பகுதி மற்றும் பாகலூர் பகுதியில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும்பட்சத்தில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலையை கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களின் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டண தொகை முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 10ம் வகுப்பு வரை படித்த ஓரு கோடி பேர் சாலை பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என தெரிவித்து பிரசாரம் செய்தார்.

அவருடன் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ, தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர், கோபிநாத், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா, தொண்டரணி சேகர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர் ஜெய்ஆனந்த், மத்திகிரி ரவி குமார், ரெட்சுரேஷ், அரவிந்தன், பாலமுருகன், நாராயணப்பா, ஆர்எஸ் மணி, அரசனட்டி ரவி, ராமாஞ்சிரெட்டி, வெங்கடேஷ், நகர மாணவரணி அமைப்பாளர் ரத்தன்சிங் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Satya Prasad ,DMK ,
× RELATED திமுக தேர்தல் படிவம் வழங்கல்