×

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர் கைது

கூடலூர், ஏப். 14:  கேரளாவில் கஞ்சா கிலோ ரூ 30 ஆயிரம் வரை விற்கப்படுவதால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று  தமிழக எல்லைப்பகுதியிலிருந்து கேரள பகுதிக்குள் டூவீலரில்  சென்ற வாலிபர் ஒருவரை கேரள கலால்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதனால் வாலிபரை போலீசார் விரட்டிச்சென்றனர். மேலும் இதுகுறித்து வண்டிப்பெரியாறு கலால்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு கலால்துறை இன்ஸ்பெக்டர் பிரமோத் தலைமையில் ஹாப்பி மோன், ரவி, ராஜ்குமார், அருண் பி நாயர் உட்பட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரைக்கண்டு தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து அவர்வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் ரூ 2.40 லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு (28) என்ற பட்டதாரி இளைஞர் என்பதும், கம்பத்தில் வாங்கிய கஞ்சாவை கேரளாவில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. கஞ்சாவையும், டூவீலரையும் பறிமுதல் செய்த போலீசார், விஷ்ணுவை கைது செய்தனர்.

Tags : Cannabis kidnapper ,Kerala ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...