×

முருங்கை பீன்ஸ் மகசூலை குறைக்கும் வெள்ளைப்பூச்சி விவசாயிகள் கவலை

கொடைக்கானல், ஏப். 14: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகளவில் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட தட்பவெப்ப சூழலால் விவசாய பயிர்களில் வெள்ளை பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக முருங்கை பீன்ஸ், உருளை, முட்டை கோஸ், நூல்கோல் உள்ளிட்ட காய்கறி பயிர்களில் இப்பூச்சிகள் அதிகளவில் தாக்கி மகசூலை குறைத்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பூச்சிகளை அழிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தினாலும் வெள்ளை பூச்சிகள் மட்டும் குறைவதில்லை. இவை தோட்டபகுதிகளிலும், சாலை பகுதிகளிலும் அதிகமாக பறந்து வருகின்றன. இதனால் விவசாயம் பாதிப்பு அடைவதுடன் டூவீலர்களில் செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மிகச்சிறிய அளவில் இந்த பூச்சிகள் இருப்பதால் காற்றில் கூட கலந்து விடுகிறது. இதனால் இதனை சுவாசிப்பபவர்களுக்கு இருமல், ஆஸ்துமா போன்ற நோய் தாக்குதலும் ஏற்படுகின்றன. எனவே தோட்டக்கலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றனர். விகாரி வருடம் சித்திரை மாதம் 01ம் நாள், ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை. திதி: நவமி காலை 6.28 மணி வரை; பிறகு தசமி மறுநாள் பின்னிரவு 3.37 மணி வரை; அதன் பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 3.04 மணி வரை; அதன் பிறகு மகம். யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.04 மணி வரை; அதன் பிறகு மந்தயோகம். நல்ல நேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11. ராகு காலம்: மாலை 4.30 முதல் 6.00 மணி வரை.எமகண்டம்: மதியம் 12.00 முதல் 1.30 மணி வரை. தமிழ் வருடப் பிறப்பு.

Tags : peach farmers ,
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...