×

காஞ்சிபுரம் தொகுதியில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பேன்: திமுக வேட்பாளர் ஜி.செல்வம் உறுதி

உத்திரமேரூர், ஏப். 14: உத்திரமேரூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் என்னை வெற்றிபெற செய்தால் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், உத்திரமேரூர், ஆதவபாக்கம், கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, பெருநகர், மானாம்பதி, கண்டிகை, காரணைமண்டபம், அத்தியூர், கம்மாளம்பூண்டி, காவனூர், குன்னவாக்கம், மலையான்குளம், திருமுக்கூடல், அண்ணாத்தூர், சாலவாக்கம், எடமச்சி, பொருப்பந்தல், தோட்டநாவல் உள்பட பல கிராமங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது, திமுக வேட்பாளர் ஜி.செல்வம் ேபசியதாவது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ஏழைகளுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.எனவே ராகுல்காந்தியை பிரதமராக்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். என்னை வெற்றி பெற வைத்தால், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார். பிரசாரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் டி.குமார், ஞானசேகரன், நகர செயலாளர் பாரி வல்லல், நிர்வாகிகள் துரைவேல், ஏழுமலை, கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், சசிகுமார், வடிவேலு, காங்கிரஸ் வழக்கறிஞர் மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மல்லிமாறன், வின்சென்ட், சேகர், மதிமுக மணிவண்ணன், தயாளன், சங்கர், கருணாகரன் உள்பட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : G. Selvam ,DMK ,constituency ,Kanchipuram ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்