×

நாமக்கல் செல்லும் வழியில் குளித்தலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

குளித்தலை, ஏப். 14: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நாமக்கல்லில் நடைபெற்ற பிரசார கூட்டத்திற்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு குளித்தலை வந்தார். குளித்தலை சுங்ககேட்டில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் ஏராளமான திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் உமாபதி உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,DMK ,Bathinda ,Namakkal ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...