×

ரபேல் பேரத்தில் ₹30 ஆயிரம் கோடி ஊழல் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் காங். வேட்பாளர் எச்.வசந்தகுமார் பிரசாரம்

திங்கள்சந்தை, ஏப். 12: ரபேல் பேரத்தில் ₹30 ஆயிரம் கோடி ஊழல் செய்த மோடி உடன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், மேலப்பெருவிளை ஆர்சி சர்ச் முன்பு இருந்து நேற்று காலையில் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். சுங்கான்கடை, களியங்காடு, ஆளூர், வில்லுக்குறி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி திமுக, மதிமுக, விசி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கழகம், ஐஜேகே, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. ரபேல் விமான பேரத்தில் இன்று பிரதமர் மோடி மூடிமறைத்த உண்மைகள் வெளியே வந்துள்ளன. ரபேல் ஊழலில் காங்கிரஸ் அன்றே சொன்னது. அதனை பேப்பர் காணவில்லை, திருட்டு போய்விட்டது, ஜெராக்ஸ் எடுத்து சென்றுள்ளனர் என்றெல்லாம் பா.ஜ.வினர் விளக்கம் அளித்து வந்தனர். இந்தநிலையில்தான் ஏற்கனவே கொடுத்த டாகுமென்ட்படி, அந்த செய்திகளின்படி விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ரோஷம் உள்ள, மானம் உள்ள பிரதமர் என்றால் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அந்த பாரத பிரதமர் பதவிக்கான மரியாதையை வழங்க வேண்டும்.

ரபேல் விமான பேரத்தில் ₹30 ஆயிரம் கோடி ஊழல் செய்த மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மோடியின் மோசடியை உச்சநீதிமன் றமே இன்று வெளியேக்கொண்டு வந்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மேலப்பெருவிளையில் வசந்தகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மாலையில் கண்டன்விளை, கொன்னக்குழிவிளை, இரணியல் கோணம், தலக்குளம், திங்கள்நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தில் வேட்பாளர் வசந்தகுமாருடன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ பிரின்ஸ், முன்னாள் எம்.பி பெல்லார்மின், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், ஆளூர் பேரூர் திமுக செயலாளர் தங்கராஜா, குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு கென்னடி, திமுக ஒன்றிய செயலாளர் எப்.எம்.ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Modi ,H. Vasanthakumar ,campaign ,
× RELATED பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி...