×

ராஜாக்கமங்கலம் அருகே காங். துண்டு பிரசுரங்களுடன் ஆம்னி கார் பறிமுதல்

ராஜாக்கமங்கலம், ஏப். 12: ராஜாக்கமங்கலம் அருகே காங்கிரஸ் நோட்டீஸ், ஸ்டிக்கர், ராகுல் காந்தி படம் பதித்த தொப்பி உள்ளிட்ட பொருட்களுடன் ஆம்னி காரை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் அருகே திக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை அதிகாரி கிறிஸ்டல் கோரட் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆம்னி கார் வந்தது. காரை புத்தளம் பகுதியை சேர்ந்த சுஜித்ராஜ்(20) என்பவர்  ஓட்டிச்சென்றார். காரில் அனுமதியின்றி கை சின்னம் பதித்த தொப்பி, ராகுல் காந்தி படம் பதித்த ஸ்டிக்கர், கை  சின்னம் பதித்த நோட்டீஸ், தேர் தல் அறிக்கை நோட்டீஸ், தோரணகொடி ஆகியவை இருந்தன. இதனை தொடர் ந்து பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி கார் மற்றும் நோட்டீஸ், தொப்பி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Kang ,Rajagamangalam ,Omni ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...