×

சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர் களை தேடி வருகின்றனர் பந்தல் அமைக்க குடிநீர் வாங்க 3070 வாக்குச்சாவடிகளுக்கு ரூ. 30 லட்சத்து 70 ஆயிரம்

கோவை, ஏப். 12 : கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள 3070 வாக்குச்சாவடிகளுக்கு பந்தல் அமைக்க, குடிநீர் வாங்க ரூ. 1000 விதம் ரூ 30 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை(தனி) பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 975 மையங்களில் 3070 வாக்குச்சாவடிகள் அமைப்பட உள்ளன. இதில் வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்க, குடிநீர் கேன் வாங்க போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ரூ.1000 விதம் ரூ 30 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 3070 வாக்குச்சாவடிகளுக்கு ஏற்கனவே மை, எழுதுகோள், மேசை துணி, பேப்பர் என பல்வேறு பொருட்கள் அனுப்பபட்டுள்ளன. இதனிடையே வாக்குச்சாவடிகளில் சமியானா, குடிநீர் போன்றவை அமைப்பதற்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ரூ 1000 வழங்கப்பட உள்ளது. இந்த பணம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகளிடம் வழங்கப்படும்,’’ என்றார்.

Tags : Sulur ,mystery buyers ,
× RELATED சூலூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து