×

கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம்

கரூர், ஏப். 12: கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கரூர் மற்றும் இனாம் கரூர் பகுதிகளில் வாக்குசேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருக்கு ஆதரவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓட்டுசேகரித்தார்.அமைச்சர் பேசியது: கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ராமானுஜம் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்பணி முடிந்ததும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். எம்பியாகிய தம்பிதுரை திருச்சியில் இருந்து கோவைக்கு ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கரூரில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொதுமக்களுக்கான அனைத்து திட்டங்களும் தடையின்றி நிறைவேற ஆதரவளிக்க வேண்டும் என்றார். கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.


Tags : Vijayabaskar ,Thambidurai ,campaign ,area ,DMK ,Karur Municipal ,
× RELATED கொரோனா சிகிச்சைக்கு தனியார்...