×

திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா கறம்பக்குடியில் தீவிர பிரசாரம்

கறம்பக்குடி, ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் உள்ள களபம், எம் தெற்கு தெரு, மாங்கோட்டை தீத்தானிபட்டி,  மழையூர்,  அதிறான்விடுதி,  வெள்ளாளவிடுதி, வழங்கொண்டான்விடுதி, கருப்பட்டிபட்டி, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி புதுப்பட்டி கடை வீதி ஆகிய இடங்களில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். புதுப்பட்டி கடை வீதியில் திறந்த வேனில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசியதாவது:குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன். காவிரியில் இருந்து தினம்தோறும் உபரி நீராக வெளியேறும் 12 டிஎம்சி தண்ணீரை தங்கள் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தடுப்பணை அமைத்து புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதியை நிறைவேற்றி தருவேன்.

 நான் 9 ஆண்டுகாலம் திருச்சி மேயராக இருந்த காலத்தில் கொள்ளிடத்தில் சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்து திருச்சி மாநகர மக்களின் குடிநீர் தேவையை சரி செய்துள்ளேன். முன்பாக குளப்பன்பட்டியில் உள்ள தூய அடைக்கல அன்னை மாதா கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள் மற்றும் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். கறம்பக்குடி தெற்கு ஒன்றிய அமமுக ஒன்றிய செயலாளர் மழையூர் முருகேசன் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வக்கில் விஜயா உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Samarapala ,constituency ,Trichy Lok Sabha ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!