புதுக்கோட்டை குன்றண்டார்கோவில் பகுதியில் திருச்சி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.12:  புதுக்கோட்டை மாவட்டம் குன்றண்டார்கோவில் பகுதியில்  தீவிர வாக்கு சேகரிப்பபில் ஈடுபட்ட திருச்சி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், கந்தர்வகோட்டை தொகுதியில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலைகிடைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று  கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட குன்றண்டார்கோவில் ஒன்றிய பகுதிகளான ஒடுகம்பட்டி, பளளத்துப்பட்டி, குண்றன்டார்கோவில், புலியூர், ஊரத்திப்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார். அப்போது  கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகம், தமாகா மாவட்ட தலைவர் கூகூர் சண்முகம், தேமுதிக,  புதிய தமிழகம், பாமக, பாரதிய ஜனதா கட்சி  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் இளங்கோவன் பேசியதாவது: அதிமுக வெற்றி கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் வேட்பாளரான நான் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு முரசு சின்னத்திலே வாக்கு கேட்டு வந்துள்ளேன்.  இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆகையால் நான் வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

Tags : Ilangovan ,Trichy Dhethika ,polling station ,Pudukottai ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்.எஸ்.ஐ பரிதாப சாவு