×

நாகை எம்பி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியாமல் அமமுக வேட்பாளர் திணறல் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி டெபாசிட் கிடைக்குமா என சந்தேகத்தில் கட்சியினர்

நாகை, ஏப்.12: நாகை மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வராசு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகி றார். அதன்படி தொகுதியில் முதல் கட்ட வாக்கு சேகரிப்பு பணியினை முடித்து 2ம் கட்டமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாழை சரவணனும் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளராக செங்கொடி என்பவர் போட்டியிடும் நிலையில் இவர், தற்போது வரையில் தொகுதியில் பெரும்பாலான இடங்களுக்கு வாக்கு சேகரிப்பு செல்லாது அக்கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் திருவாரூரை அடுத்த காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அந்த வங்கியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடு பட்டதாகவும்,  அதனை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் சரவணன் மூலமாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையின் போது இவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஆலோ சனைக்கு பின்னர் மாலை 6 மணியளவில் இவரது மனு ஏற்றுகொள்ளப்படுவதாக தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்  ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் இவரை ஆதரித்து, தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக கட்சியின் துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் வந்தபோது திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர் காமராஜுக்கு ஆதரவாக பேசிவிட்டு பின்னர் அந்த தொகுதியில் நிறை வேற்ற ப்படும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தார். அதன்பின்னர் நாகை எம்பி தொகுதியின்  கோரி க்கைகள் குறித்து பேச முற்பட்ட போது அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. ஒரேயடியாக தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று ஒரு வார்த்தை யில் தெரிவித்து விட்டு அங்கிருந்து டிடிவி தினகரன் புறப்பட்டார்.

இதனையடுத்து அவசர, அவசரமாக அவர் நாகைக்கு சென்ற நிலையில் அங்கும் இரவு 10.10  மணி ஆகிவிட்டதால் செங்கொடியை ஆதரித்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இதற்கு முன்னதாக திருத்துறைப்பூண்டியில் டிடிவி தினகரன் பேசிய நிலையிலும் நாகை தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் மற்றும்  பிரச்சினைகள் குறித்தும், அதனை தீர்த்து வைப்போம்  என்றும் எவ்வித உறுதிமொழியும் கொடுக்காது  செங்கொடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி நாகை மக்களவை தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் என 6  எம்.எல்.ஏ தொகுதிகள் இருந்து வரும் நிலையில் இந்த 6 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 2வது கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அ.ம.மு.க வேட்பாளர் செங்கொடியோ இதுவரையில் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் முதல் கட்ட பிரச்சாரத்தைக் கூட முடிக்காதது வாக்காளர்களை மட்டுமின்றி அக்கட்சியை சேர்ந்த பொறுப் பாளர்களையும் மிகுந்த அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
ஏற்கனவே வேட்புமனு பிரச்சனை, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகையின் போது நேரம் முடிந்து பேச முடியாது உட்பட பல்வேறு தடைகள் தொடர்ந்து செங்கொடிக்கு இருந்து வரும் நிலையில் பிரச்சாரத்தில் கூட அவர் பின்தங்கியிருப்பது டெபாசிட் பெறுவதற்கு கூட வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : MPs ,Nagam ,leaders ,volunteers ,Samajwadi Party ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...