×

தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் நேரடியாக எடுத்து கூறுவேன் கரூர் காங். வேட்பாளர் ஜோதிமணி க.பரமத்தி ஒன்றியத்தில் பிரசாரம்

கரூர், ஏப். 12:  என்னை தேர்வு செய்தால் பிரதமரை நேரடியாக சந்தித்து தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து எடுத்து கூறுவேன் என்று க.பரமத்தி ஒன்றியத்தில் பிரசாரம் செய்த கரூர் காங். வேட்பாளர் ஜோதிமணி கூறினார்.கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று க.பரமத்தி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்குசேகரித்து அவர் பேசியது:க.பரமத்தி ஒன்றியத்தில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையை துவக்கினேன். 23 ஆண்டு காலம் மக்களுக்காகவே பணியாற்றி வருகிறேன். ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது பல மாநிலங்களில் கட்சி பணியாற்றியிருக்கிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் வரப்போகிறது. என்னை தேர்வு செய்தால் தொகுதி மக்கள் பிரச்னைகளை நேரடியாக பிரதமரிடம் என்னால் எடுத்துக்கூற முடியும். நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. எனக்கு கல்லூரிகள் கிடையாது.

இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையைக்கூட தீர்க்க முடியவில்லை. தனிகுடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். தாதம்பாளையம் ஏரியை தூர்வார வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. மத்திய அரசிடம் இருந்து ஒரு கடிதம் பெற வேண்டும். அதைக்கூட 10 வருடம் எம்பியாக இருந்தவரால் செய்ய முடியவில்லை.அரவக்குறிச்சி தொகுதி அனாதையாகி விட்டது. செந்தில்பாலாஜி பதவி அரசியல் காரணத்திற்காக பறிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலையும் தோல்வி பயத்தினால் நடத்தாமல் இருக்கின்றனர். இதனால் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வந்திருக்கிறது. செந்தில்பாலாஜியை போல ஒரு அருமையான எம்எல்ஏ உங்களுக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மீண்டும் அதற்காகவும் வாக்கு சேகரிக்க வருவோம். இப்பகுதியில் வேலைவாய்ப்பினை உறுதிசெய்யும் வகையில் பயிற்சி மையம் அமைப்பேன் என்றார்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மற்றும் திமுக, காங், இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் கம்யூ, மதிமுக உள்ளிட்டதோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்,அஞ்சூர் ஊராட்சி நரிக்காட்டுவலசு அதிமுக கிளை செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலும், தென்னிலை ஊராட்சி கூனம்பட்டி ஊராட்சி அமமுக ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பிரசாத், முததுப்பாண்டி ஆகியோர் தலைமையிலும் அக்கட்சியிலிருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.

Tags : Karur Kang ,constituency ,Candidate ,Jyothimani K. Paramati Union ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...