ஆண்டிமடம் ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

ஜெயங்கொண்டம், ஏப். 12: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது குறித்து தேவனூர், நெட்டலைகுறிச்சி, ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம் ஆகிய ஊர்களில் திமுக ராட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் தர்மதுரை தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரங்கமுருகன், மாவட்ட துணை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் குமார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அந்தோணிசாமி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் கலியபெருமாள், அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More