×

கொரடாச்சேரி பகுதியில் நாகை எம்பி தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் பிரசாரம்

திருவாரூர், ஏப்.12: நாகை எம்.பி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் நேற்று கொரடாச்சேரி  வடக்கு ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நாகை எம்.பி  தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக செல்வராஜ் போட்டியிடும் நிலையில் அவர் தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், மணக்கால், அரசவனங்காடு, காப்பணாமங்கலம், எண்கண், ஆய்குடி, அம்மையப்பன், பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவும், மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யவும், விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கவும் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வேட்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.Tags : Candidate ,India ,Selvaraj ,
× RELATED கட்சி தொடங்கினாலும் முதல்வர்...