×

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கரூர் அமமுக வேட்பாளர் தங்கவேல் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

கரூர், ஏப். 12: கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்வேல் நேற்று கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரித்தார். கொளுத்தும் வெயிலிலும் பிரசாரம் மேற்கொண்டார். பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஆதரவு கேட்டார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்களிடம் அவர் கூறுகையில்,அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுசெயலாளர் தினகரன் அன்பு, ஆசிபெற்ற வேட்பாளராக பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு நான் வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு பிறரைப்போல சம்பாதிப்பதற்காக வரவில்லை. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது. காவிரி அருகில் இருந்தும் இந்த நிலைமை. காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டும் நீரை சேமிக்க திட்டம் இல்லை. கடலில் வீணாக கலந்து விட்டது. நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. வாய்க்காலை தூர்வாரும் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஓட்டு மட்டும் வாங்கி விட்டு போய் விடுகிறார்கள். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்கிறார்கள்.

மத்திய அரசோடு இணைக்கமாக இருப்பவர்கள் இதுபோன்ற நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற தவறி விட்டனர். நிதியை பெற முடியவில்லை. இந்த இடத்தில்தான் தினகரன் போன்ற தலைவர்கள் தேவை. சாதித்து காட்டியிருப்பார். அம்மாவின் அரசு எனக்கூறி ஏமாற்றி வருகின்றனர். அம்மாவால் எதிர்க்கப்பட்டவர்களோடு கூட்டணி வைத்து கொண்டுள்ளனர். தொண்டர்கள் ஆதரவு எனக்கு சிறப்பாக இருக்கிறது. டிடிவி தினகரன் கரத்தை வலுப்படுத்த வேண்டும். என்னை நீங்கள் தேர்வு செய்தால் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.

Tags : Karoor ,candidate ,constituency ,Amma ,Krishnarayapuram ,village ,village panchayat ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...