×

தேவதானப்பட்டி அருகே காளியம்மன் கோயில் திருவிழா

தேவதானப்பட்டி, ஏப். 12: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி காளியம்மன் கோயில் 42வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. முதல் நாள் கங்கைக்கு சென்று காளியம்மன் கரகம் அலங்காரம் செய்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாம்நாள் அதிகாலை ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சாமிதரிசனம் செய்தனர்.
பின்னர் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மூன்றாம் நாள் காலையில் ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். மாலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மன் சன்னிதியில் வைத்து வழிபட்டு, கங்கையில் செலுத்தினர். விழாக்குழு இளைஞரணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் திருவிழாவையொட்டி தேவதானப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீசியெறியப்பட்ட பிஸ்கெட் பாக்கெட் பிரசாரத்திற்காக பெண்கள், குழந்தைகளை ஆளுங்கட்சியினர் அழைத்து வந்திருந்தனர். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக திரட்டப்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் 4 மணி நேரமாக காத்திருந்தனர். அப்போது காரில் வந்த அதிமுகவினர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை பெண்கள் கூட்டத்திற்குள் தூக்கியெறிந்து விட்டுச் சென்றனர். குழந்தைகளுக்காக அந்த பிஸ்கெட் பாக்கெட்டுக்களை பிடிக்க பெரும் சிரமப்பட்டனர்.

Tags : Kaliamman ,temple festival ,Devadanapatti ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா