மணல் குவாரி பள்ளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

சேத்தியாத்தோப்பு, ஏப். 12: சேத்தியாத்தோப்பு அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் பழைய மணல் குவாரியில் உள்ள பள்ளத்தில் பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விஏஒ செந்தில்குமார் ஒரத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தூர் போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் சடலமானது மிகவும் அழுகி இருந்ததால் ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என அடையாளம் தெரியவில்லை.
இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Childbirth recovery ,
× RELATED தமிழகத்தில் மணல் குவாரிகளை...