குற்ற சம்பவங்களை தடுக்க கிள்ளையில் சிசிடிவி கேமரா பொருத்தம்

சிதம்பரம், ஏப். 12: சிதம்பரம் அடுத்த கிள்ளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை எஸ்பி சரவணன் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி பகுதியில் பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கிள்ளை பேரூராட்சி பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா அமைக்க கிள்ளை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரூ.70 ஆயிரம் செலவில் கிள்ளை மீனவர் காலனியில் போலீசாரால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இதனை கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், இந்த பகுதியில் குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

× RELATED கல்குவாரிக்கு மின் இணைப்பு...