விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் சோதனை வாக்குப்பதிவு

விருத்தாசலம், ஏப். 12: நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள்  மற்றும் பெயர் பதிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா, வாக்காளர்கள் பதிவிடும் சின்னத்தில் தான் பதிவாகிறதா மற்றும் வாக்குகள் பதிவானதை உறுதி செய்துகொள்வது உள்ளிட்ட பணிகளை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 18 வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொரு இயந்திரங்களிலும் ஆயிரம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவை பதிவிட்டு சோதனை மேற்கொண்டனர்.விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, மண்டல துணை தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ், கணினி இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடனிருந்தனர்.

× RELATED புதுச்சத்திரம் அருகே லாரி மோதி மின் கம்பங்கள் சேதம்