×

அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.12: ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பில் ரவுண்டான அமைத்து விபத்தை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களுக்கும் தேவிபட்டினம் போன்ற நவபாசன தலத்திற்கும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர். அதேபோல் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ராமேஸ்வரம் போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்வதற்கு இந்த சாலை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு செல்வதற்கு பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் திரும்பும் போது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்சமயம் இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. ஆகையால் இந்த விரிவாக்கம் பணி நடைபெறும் போதே ரவுண்டான அமைப்பது எளிது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு ரவுண்டானாவை அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Trichy-Rameswaram Road ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...