×

வள்ளியூர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை, ஏப். 12:  வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் “பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆங்கிலத்துறை தலைவர் பகவதி லெட்சுமி அம்மாள் வரவேற்றார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, நாங்குநேரி அரசு சேவை மைய அலுவலர் ராஜம்மாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
ராஜம்மாள் பேசுகையில், பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்பதையும், நமது கலாசாரத்தின் வலிமை பெண்கள் தான் என்றும் வலியுறுத்தினார்;. பெண்கள் மற்றவர்களிடம் பழகும்போது மிகவும் கவனமாக இருப்பது தேவையான ஒன்று என்றும் குறிப்பிட்டார். பெண்கள் வாழ்க்கையின் நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டும். நீதி தவறிய செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் சாந்தி பேசும்போது, பெண் உரிமைக்கு எதிராக 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும், என்றார். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் பிள்ளை செய்திருந்தார். பேராசிரியர் ரேஷ்மா ஜோசப் நன்றி கூறினார்.

Tags : Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!