×

ஐன்ஸ்டீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

நெல்லை, ஏப். 12: சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் எழில்வாணன் முன்னிலை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் வேலாயுதம் வரவேற்றார். வேப்கோ இந்தியா நிறுவன மேலாளர் திலிப்குமார், ஜென்கார் நிறுவன மேலாளர் பால் அசோக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். வேப்கோ நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் கோபிநாத் மற்றும் ஜென்கார் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் ரூபஸ் அலெக்ஸ் ஆகியோர் வளாகத்தேர்வு நடத்தினர். குழு கலந்துரையாடல், மற்றும் நேர்முக தேர்வு முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேப்கோ நிறுவனம் இயந்திரவியல் துறையில் இருந்து 11 மாணவர்களுக்கும், மின்னணுவியல் துறையில் இருந்து 10 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கியது. ஜென்கார் நிறுவனம் இயந்திரவியல் துறையை சேர்ந்த 12 மாணவர்களுக்கும், மின்னணுவியல் துறையை சேர்ந்த 2 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கியது. மேலும், வேப்கோ நிறுவனம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடத்தி சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 5 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறங்காவலர் அமுதவாணன், கல்லூரி செயலாளர் எழில்வாணன், இயந்திரவியல் துறை தலைவர் அருள்ராஜ், மின்னணுவியல் துறை தலைவர் தேவி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இயந்திரவியல் துறை வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் வேலாயுதம், இயந்திரவியல் துறை துறை தலைவர் அருள்ராஜ், சுரேஷ், பேராசிரியர்கள் அகிலன், மகேஷ் பிரேம்குமார், மின்னணுவியல் துறை வேலைவாய்ப்பு அலுவலர் ராம்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Einstein College Placement Camp ,
× RELATED சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி 95.85% தேர்ச்சி