×

ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் பேச்சு

திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை உள்பட பல இடங்களில் வாக்குகள் சேகரித்து பேசியதாவது: ‘ஒட்டன்சத்திரம் விவசாயிகளின் கேந்திரமாக உள்ளது. இங்கு தண்ணீர் இல்லாததால் பல விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு திருப்பூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர். இங்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் ஒரு குடம் ரூ.10க்கு விலைக்கு வாங்குகின்றனர். காவிரியில் இருந்து தண்ணீர் வருவதாக கடந்த 5 ஆண்டுகளாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் மக்களுக்கு தண்ணீர் வந்தபாடில்லை. கண்ணில்தான் தண்ணீர் வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எடுப்பேன்.

ஒட்டன்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரி இல்லாததால் மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்பதற்கு திண்டுக்கல், பழநிக்கு படையெடுக்க வேண்டியுள்ளது. வசதி இல்லாதவர்கள் கல்வி பெற முடியாத நிலை உள்ளது. எல்லோரும் எழுத்தறிவு பெறவும், உயர்கல்வி பெறவும் அரசு கல்லூரிகள் இங்கு துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள ரோடுகள் அனைத்தும் தரமற்று குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். தரமான ரோடுகள் கிராமங்கள்தோறும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தவிக்கும் முதியோர்களுக்கு உதவித்தொகை வாங்கி தருவதற்கு நான் முயற்சி செய்வேன். நங்காஞ்சியார் அணையை தூர்வாரி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் வறுமை ஒழித்து வளமை உண்டாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றார். உடன் மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நல்லுசாமி இருந்தார்.

Tags : Jyothi Murugan ,Ottapattiram ,
× RELATED பூட்டு தொழிலுக்கு பூட்டு போட்டவர்களை...