×

மருதன்வாழ்வு டி.அய்யப்பபுரம் ஹனுமன் தியான பீடத்தில் ராமநவமி விழா

நெல்லை, ஏப்.12: ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மருதன்வாழ்வு பஞ்சாயத்து டி.அய்யப்பபுரம் ஹனுமன் தியான பீடத்தில் ராமநவமி விழா நாளை (13ம்தேதி) நடக்கிறது.
மருதன்வாழ்வு பஞ்சாயத்து, டி.அய்யப்பபுரம் ஹனுமன் தியானபீடத்தில் ராமநவமி விழா நாளை காலை 7மணிக்கு அனுக்ஞை, மகா கணபதி பிரார்த்தனை சங்கல்பம், புண்யாகவாசனம், வேதிகா அர்ச்சனை,  யாகவேள்வி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை  8.30 மணிக்கு மஹா அபிஷேகம், பஜனை, 8.50 மணிக்கு ராமநவமி திருவித்யானம் சீதாராம ஊஞ்சல் உற்சவமும் தொடர்ந்து 9மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் நர்த்தன பஜனை சார்பில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. மதியம் 12மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 12.30 மணிக்கு மஹா அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை  அய்யப்பபுரம்  ஹனுமன் தியானபீடம் விழா கமிட்டியார்கள் செய்து வருகின்றனர்.

Tags : Devi Ayyappuram Hanuman Dhyan ,
× RELATED தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும்...