×

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியத்தில் இன்று திமுக வேட்பாளர் கனிமொழி பிரசாரம்

தூத்துக்குடி, ஏப்.12:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி இன்று (12ம் தேதி) காலை 7 முதல் 12 வரை கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மூப்பன்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து ஆவல்நத்தம், சாலைபுதூர் விலக்கு, ஆலம்பட்டி, படர்ந்தபுளி, தோணுகால், கயத்தாறு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வானரமுட்டி, குமரெட்டியாபுரம், காளம்பட்டி, சின்னகாளம்பட்டி, கட்டாலங்குளம், சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, தெற்கு வெள்ளாளன்கோட்டை, திருமங்கலக்குறிச்சி, கோவில்பட்டி மேற்கு  மெய்தலைவன்பட்டி, சத்திரபட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். மாலை 3 முதல் இரவு 10 மணி வரை கோவில்பட்டி மேற்கு     ஒன்றியம் ஊத்துப்பட்டி, இடைசெவல், வில்லிசேரி, கயத்தாறு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம், மானங்காத்தான், அய்யனாரூத்து, கயத்தாறு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கயத்தாறு பேரூராட்சி, அரசன்குளம், சன்னது புதுக்குடி, ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், தெற்கு மயிலோடை, புதுக்கோட்டை, தெற்கு சுப்பிரமணியபுரம், பன்னீர்குளம், அகிலான்டபுரம், சத்திரப்பட்டி, திருமலாபுரம், சிதம்பராபுரம், கடம்பூர் காமராஜர் சிலை முன்பு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : candidate ,DMK ,Kavilpatti ,Kayatharu Union ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்