×

விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடு ‘பெல்’ பொறியாளர்கள் ஆய்வு யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும்

திருவண்ணாமலை, ஏப்.12: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடுகளை `பெல்'''' நிறுவன பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் விவிபேட் இயந்திரங்களை இணைத்து சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது.
அதன்படி, திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 272 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், விவிபேட் இயந்திரங்களை பொருத்தி, வாக்களித்த விபரம், 7 வினாடிகள் அதன் திரையில் தெரிவதையும், ஒப்புகை சீட்டு அதன் பெட்டிக்குள் விழுவதையும் பெல் பொறியாளர்கள் சரிபார்த்து உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வரும் 17ம் தேதி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(கேப்சன்)திருவண்ணாமலை படம் எண் 5
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, விவிபேட் இயந்திரத்துடன் இணைத்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட பெல் நிறுவன பொறியாளர்கள்.

Tags : engineers ,Bell ,
× RELATED சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை ஊரக...