×

பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன் காங்.,வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேச்சு

சிவகாசி, ஏப். 11: விருதுநகர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்தாகூர் சிவகாசியில் உள்ள முஸ்லீம் தெரு, அண்ணா காலனி, புதுத்தெரு, தெற்குதெரு, காமராஜர் நகர், ஆயில்மில் காலனி, காரனேசன் காலனி, தேவர் சிலை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘சிவகாசியில் பட்டாசுத் தொழிலை நம்பி 8 லட்சம் குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 4 மாதமாக பட்டாசு ஆலைகள் செயல்படாததால்  அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தேர்தலுக்காக பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்தவுடன் அவைகள் மீண்டும் மூடப்படும். சிவகாசியில் பட்டாசு ஆலைகள் செயல்பாடாததால், பிற தொழில்களும் முடங்கி கிடக்கின்றன. நான் வெற்றி பெற்றால் பட்டாசு தொழிலை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன்.
சிவகாசி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி நகராட்சியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். சிவகாசியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். மாநிலத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், கல்வி மற்றும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது, ‘திமுக நகரச் செயலாளர் காளிராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் தங்கராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜாசொக்கர் உட்பட கூட்டணி  கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்